Font Problem?

Main Menu

யவ்முத் தர்வியா (8ம் நாள்) கிரியைகள்!

வெளியீடு நன்றி: அல்-ஹஸா இஸ்லாமிய மையம், சவூதி அரேபியா

'யவ்முத் தர்வியா'| என்று இதற்குப் பெயர் வரக் காரணம் அதற்குப் பின்னுள்ள நாட்களுக்காக மக்கள் அன்றைய தினம்தான் தண்ணீர் சேகரித்துக்கொள்வர்.

1) தமத்துஃ வகை ஹஜ் செய்பவர்களும் ஹஜ் செய்ய நாடியுள்ள மக்காவாசிகளும் இன்றைய தினம் தாம் தங்கியிருக்கும் இடத்திலிருந்துக்கொண்டு இஹ்ராம் அணிய வேண்டும். கிரான் மற்றும் இஃப்ராத் செய்பவர்கள் தங்கள் இஹ்ராமில் தொடர்ந்து நீடிப்பர்.

2) 'லப்பைக்க ஹஜ்ஜன்' என்று கூறி நிய்யத் செய்துவிட்டு தல்பியாவைத் தொடங்க வேண்டும்.

3) ஹஜ்ஜை முழுமைப்படுத்த இயலாமல் தடை ஏதேனும் ஏற்படும் என்கிற அச்சம் உண்டாகுமானால் 'எனக்கு ஏதாவது தடை ஏற்படுமானால் அந்த இடமே நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்' என்ற நிபந்தனை ரீதியான நிய்யத் வைத்துக்கொள்ள வேண்டும். இதன் நன்மை யாதெனில், ஒரு வேளை அவர் தடுக்கப்பட்டு ஹஜ்ஜை முழுமைப்படுத்த இயலாமற்போனால் அவர் இஹ்ராமைக் களைந்துகொள்ளலாம். அதனால் அவர் மீது எந்தப் பரிகாரமும் கிடையாது.

4) ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்ததும் சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்கு முன்பு மினாவை நோக்கி தல்பியா கூறிக்கொண்டே செல்ல வேண்டும். அங்கு ளுஹர், அஸர், மக்ரிப், இஷா ஆகிய தொழுகைகளை அதனதன் நேரத்தில் நான்கு ரக்அத் தொழுகைகளை மாத்திரம் இரு ரக்அத்களாகச் சுருக்கித் தொழ வேண்டும்.

5) அன்றைய (அரஃபா நாள்) இரவில் மினாவில் தங்க வேண்டும். ஃபஜ்ர் தொழுதுவிட்டு சூரியன் உதயமாகும் வரை திக்ரு கூறிக்கொண்டு அங்கேயே இருக்க வேண்டும். மேலும் மினா, அரஃபாத் ஆகிய இடங்களில் தல்பியாவை அதிகப்படுத்த வேண்டும். தல்பியாவுக்கான நேரம் 10-ஆம் நாள் பெரிய ஜமராவில் கல்லெறியும் வரை நீடிக்கும்.